விநாயகர் துதி :

 

ஐந்து கரத்தானை-ஆணை முகத்தானை
வேலோடு விளையாடும் வேலனின் சோதரனை
விக்னங்கள் களையும் வினாயகப் பெருமானை
பரமபதம் அருளும் பார்வதி புத்திரனை
என்னாளும் மறவாமல் நினைப்பாய் நெஞ்சமே

 

தேவியின் துதி :

 

கழுத்தில் கருக மணியும் காதில் கனகதோடும்.
கதம்பமலர் மாலையணிந்து மஞ்சள் குங்குமம் புஸ்பம் தரித்து
கரத்தில் அபய முத்திரையும்,பூரண சந்திரனின் முகப்பொலிவும்
எல்லாபுரமாளும் ஏகநாயகியே,சுயம்புவாய் அமர்ந்த சுமங்கலியே
கைவங்கிரிவாமும் பரமனின் மடியர்ந்த
பவானியே நின்பாதம் போற்றி! போற்றி ! போற்றி !

 

ஓம் ஸ்ரீ பவானியின் துதிப்பாடல்கள் :

"உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா" ராகம்

 

1. அன்புருவாய் அமர்ந்தவளே தேவி பவானியம்மா
                                                                     -தேவி பவானி

ஆயிரம் கண் படைத்தவளே தேவி பவானி
இதயத்தில் வந்தமர்வாய் தேவி பவானியம்மா
                                                                    -தேவி பவானி

4. ஸ்வரியே எனையாளும் தேவி பவானி
உலகாளும் உத்தமியே தேவி பவானியம்மா
                                                                    -தேவி பவானி
ஊழ்வினையை அகற்றிடுவாய் தேவி பவானி
எங்கும் நிறைந்தவளே தேவி பவானியம்மா
                                                                   -தேவி பவானி

8. ஏழுலகம் காப்பவளே தேவி பவானி
ஐம்புலன்கள் அடக்கி நின்றேன் தேவி பவானியம்மா
                                                                  -தேவி பவானி
ஐயத்தை போக்கிடுவாய் தேவி பவானி
ஒளிவடிவாய் அமர்ந்தவளே தேவி பவானியம்மா
                                                                  -தேவி பவானி


12. ஓங்கார ரூபிணியே தேவி பவானி
ஒளஷதமாய் நின்றவளே தேவி பவானியம்மா
                                                                 -தேவி பவானி
அஃது இங்கு வந்தவளே தேவி பவானி
கருணை வடிவானவளே தேவி பவானியம்மா
                                                                 -தேவி பவானி


16. காத்தருள்வாய் என்னாளும் தேவி பவானி
சன்மார்க்க நாயகியே தேவி பவானியம்மா
                                                                -தேவி பவானி
சான்றோரை காத்திடுவாய் தேவி பவானியம்மா
துன்பங்கள் போக்கிவிடுவாய் தேவி பவானியம்மா
                                                               -தேவி பவானி


20. தூயவளே அருளரசியே தேவி பவானி
திக்கற்றோர் குறை தீர்ப்பாய் தேவி பவானியம்மா
                                                              -தேவி பவானி
தீயோரை அழிப்பவளே தேவி பவானி
குற்றங்கள் நீக்கிடுவாய் தேவி பவானியம்மா
                                                              -தேவி பவானி


24. குறைகளைந்து குணம் வளர்ப்பாய் தேவி பவானி
கண் கலங்கி வந்தவர்கள் தேவி பவானியம்மா
                                                              -தேவி பவானி

கவலைகள் தீர்த்திடுவாய் தேவி பவானி
பரமசிவன் பத்தினியே தேவி பவானியம்மா
                                                              -தேவி பவானி


28. பாவங்கள் போக்கிடுவாய் தேவி பவானி
அன்னையுன்னை தேடி வந்தேன் தேவி பவானியம்மா
                                                              -தேவி பவானி
ஆதரித்தருள்வாயே தேவி பவானி
திருநீற்றை அணிந்திருப்பாய் தேவி பவானியம்மா
                                                             -தேவி பவானி


32. தீராத வினை தீர்ப்பாய் தேவி பவானி
வினைதீர்க்கும் வித்தகியே தேவி பவானியம்மா
                                                             -தேவி பவானி
வீரத்தை கொடுப்பவளே தேவி பவானி
வேப்பிலையே அணிந்திருப்பாய் தேவி பவானியம்மா
                                                             -தேவி பவானி


36. வேம்புலிமயாய் அமர்ந்தவளே தேவி பவானி
நாடாளும் நாயகியே தேவி பவானியம்மா
                                                             -தேவி பவானி
நாரணணின் சோதரியே தேவி பவானி
புற்றினுள் அரவாக வாழ்வாய் தேவி பவானியம்மா
                                                             -தேவி பவானி


40. பூவையே பராசக்தியே பவானி
மங்களமாய் வீற்றிருப்பாய் தேவி பவானியம்மா
                                                             -தேவி பவானி
மாங்கல்யம் காத்திடுவாய் தேவி பவானி
பக்தர்களை காத்திடுவாய் தேவி பவானியம்மா
                                                             -தேவி பவானி

44. பாங்காள உத்தமியே தேவி பவானி
பரமபதம் அளித்திடுவாய் தேவி பவானியம்மா
                                                             -தேவி பவானி
பணிந்திட்டேன் உன் பாதம் தேவி பவானி
ஆரணி ஆற்றங்கரையில் அமர்ந்தாய் தேவி பவானியம்மா
                                                             -தேவி பவானி


48. ஆதி பராசக்தி தேவி பவானி
பெரியபாளையத்துறையும் தேவி பவானியம்மா
                                                             -தேவி பவானி
பெரியாயியாய் அமர்ந்தாய் தேவி பவானி
அங்கம் மறைந்து எங்கும் தேவி பவானியம்மா
                                                            -தேவி பவானி


52. எங்கும் உரைந்திடுவாய் தேவி பவானி
உலகத்து மக்களிடம் தேவி பவானியம்மா
                                                            -தேவி பவானி
ஒழுக்கத்தை உணர்ந்திடுவாய் தேவி பவானி
நல்லோரை காத்திடுவாய் தேவி பவானியம்மா
                                                            -தேவி பவானி


56. நன்மைகளை செய்திடுவாய் தேவி பவானி
நாமம் ஆயிரம் படைத்தாய் தேவி பவானியம்மா
                                                            -தேவி பவானி
நாகேஸ்வரி தாயே பவானியம்மா
மஞ்சள் கனி தந்த தேவி பவானியம்மா
                                                            -தேவி பவானி
60. மஞ்சள் பிணி தீர்த்திடுவாய் தேவி பவானி
அஞ்ஞானம் போக்கிடுவாய் தேவி பவானியம்மா
                                                            -தேவி பவானி

அறிவை வளர்த்திடுவாய் தேவி பவானி
எல்லாபுரம் உறைபவளே தேவி பவானியம்மா
                                                            -தேவி பவானி


64. எல்லாம் அறிந்தவளே தேவி பவானி
என் கடமை நான் செய்ய தேவி பவானியம்மா
                                                            -தேவி பவானி
எனக்குதவி புரிந்திடுவாய் தேவி பவானி
உன் மீது பக்தி கொண்டேன் தேவி பவானியம்மா
                                                            -தேவி பவானி


68. உன்னை இனி நான் மறவேன் தேவி பவானி
வாழ்க்கை என்னும் கடல் கடக்க தேவி பவானியம்மா
                                                            -தேவி பவானி
வந்து துணை நீ புரிவாய் தேவி பவானி
நிலை இல்லா இல்வாழ்க்கை தேவி பவானியம்மா
                                                            -தேவி பவானி


72. நினைத்தாலே நடுங்கிடுதே தேவி பவானி
கருமை நிறம் கொண்டவளே தேவி பவானியம்மா
                                                            -தேவி பவானி
கடைக்கண்ணால் பார்த்தருளம் தேவி பவானி
ஏகஸ்வரூபியே தேவி பவானியம்மா
                                                            -தேவி பவானி


76. ஏழை எனக்கருள்வாய் தேவி பவானி
நல்லறிவு பக்தி ஞானம் தேவி பவானியம்மா
                                                           -தேவி பவானி
நாளும் நான் பெற வேண்டும் தேவி பவானி
திங்கள் மும்மாரி பெய்ய தேவி பவானியம்மா
                                                           -தேவி பவானி

 

80. திருவருளை நாடுகின்றேன் தேவி பவானி
அகமுருகி பாடுகின்றேன் தேவி பவானியம்மா
                                                           -தேவி பவானி
அன்புடனே எனக்கருள்வாய் தேவி பவானி
ஆசை,பயம்,கோவம்,பொய் தேவி பவானியம்மா
                                                           -தேவி பவானி
அகன்றிடவே அருள் புரிவாய் தேவி பவானி
உலகம் செழித்திடவே தேவி பவானியம்மா
                                                           -தேவி பவானி
உத்தமியே அருள்புரியும் தேவி பவானி
எல்லை இல்லா உன் கருணை தேவி பவானியம்மா
                                                           -தேவி பவானி


88. எல்லோருக்கும் பொழிந்திடுவாய் தேவி பவானி
வேதங்கள் தழைத்திடவே தேவி பவானியம்மா
                                                          -தேவி பவானி
வேண்டும் வரம் தந்திடுவாய் தேவி பவானி
அறத்தை வளர்த்திடுவாய் தேவி பவானியம்மா
                                                          -தேவி பவானி


92. புவனேஸ்வரிதாயே தேவி பவானி
எங்கள் குல நாயகியே தேவி பவானியம்மா
                                                          -தேவி பவானி
என்னாளும் காத்திடுவாய் தேவி பவானி
அறத்தை வளர்த்திடுவாய் தேவி பவானியம்மா
                                                          -தேவி பவானி


96. அரவுடனே நிற்பவளே தேவி பவானி
மூவர்க்கு முதல்வனே தேவி பவானியம்மா
                                                         -தேவி பவானி
முக்கண்ணன் பத்தினியே தேவி பவானி
அண்டமெல்லாம் ஆள்பவளே தேவி பவானியம்மா
                                                         -தேவி பவானி

 

100. ஆனந்த ரூபினியென தேவி பவானி
சந்திரபிறை தரித்தவளே தேவி பவானியம்மா
                                                        -தேவி பவானி
சந்திரன் போல் குளிர்ந்தவளே தேவி பவானி
நேசமுடன் நெஞ்சுருகி தேவி பவானியம்மா
                                                        -தேவி பவானி

 

104. நின் புகழை பாடுகின்றேன் தேவி பவானி
வாழிய நின் திருநாமம் தேவி பவானியம்மா
                                                       -தேவி பவானி
வாழிய நின் புகழ்யாவும் தேவி பவானி
வாழிய இவ்வுலகனைத்தும் தேவி பவானியம்மா
                                                       -தேவி பவானி

 

109. வாழ்த்திடுக நலம் யார்க்கும் தேவி பவானி
ஸ்ரீ பவானியின் திருவடிகளே சரணம் சரணம்
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.