சித்திரை

தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு வழிபாடு

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மூலவர் ஸ்ரீ பவானி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம். உற்சவர் பவானி அம்மன் ஆரணி ஆற்றங்கரையில் எழுந்தருளச்செய்து சிறப்பு அபிஷேகம். சிறப்பு அலங்காரம், மேள தாள வாத்தியங்களுடன் திருவீதி உலா.

கத்தரி பூஜை முன்னிட்டு பானகம் நிவேதனம் செய்யப்படும்.

ஆடி

ஆடி பிரம்மோற்சவம் முன்னிட்டு ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று பந்தகால் நடைபெறும். ஆடி முதல் வார சனிக்கிழமை அன்று அற்புத சக்தி விநாயகருக்கு 108 பால்குட அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மேள தாள வாத்தியங்களுடன் திருவீதி உலா. ஆடிமாதம் முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 14 வாரம் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஜோதி தரிசனம். ஸ்ரீ பவானி உற்சவர் அம்மன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். பிரகார புறப்பாடு. மாலை சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா.

ஆடிப்பூரம் முன்னிட்டு சர்வ சந்தோஷ சக்தி மாதங்கி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைப்பெறும்.

ஆவணி

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அற்புத சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஓமங்கள், அலங்காரம்,திருவீதி உலா நடைபெறும்.

புரட்டாசி

ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு சந்தனகாப்பு நடைபெறும்.

நவராத்திரி முன்னிட்டு கொலு அலங்காரம் செய்யப்பட்டு, 9 நாட்களுக்கும் மாலை ஸ்ரீ பவானி உற்சவர் அம்மனுக்கு வெவ்வேறு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஓமங்கள் நடைபெறும். 10 ம் நாள் விஜயதசமி முன்னிட்டு பார்வேட்டை உற்சவம் நடைபெறும்.

ஐப்பசி

நாக சதுர்த்தி முன்னிட்டு புற்றுக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும்.

கார்த்திகை

திருக்கார்த்திகை தீபம் முன்னிட்டு மகா தீபம் சொக்கப்பனை ஏற்றப்படும்.

மார்கழி

மார்கழி மாதம் தனூர் மாத பூஜை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டு மூலவர் ஸ்ரீ பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

அனுமன் ஜெயந்தி முன்னிட்டு அனுமன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். வடைமாலை சாற்றப்படும்.

தை

தைப்பொங்கல் முன்னிட்டு மூலவர் ஸ்ரீ பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாட்டுப்பொங்கல் முன்னிட்டு திருக்கோயில் கோசாலையில் உள்ள மாடுகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோ பூஜை நடைபெறும்.

தைபூசம் முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெறும். மாலை உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன், மேள தாள வாத்தியங்களுடன் திருவீதி உலா நடைபெறும்.

பௌர்ணமி உற்சவம்

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும்.

மாதாந்திர பௌர்ணமி முன்னிட்டு உற்சவர் ஸ்ரீ பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். மாலை மரத்தேர் பவனி நடைபெறும்.

கிருத்திகை முன்னிட்டு ஸ்ரீ சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சந்தனகாப்பு நடைபெறும்.

சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு ஸ்ரீ அற்புத சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும்.